Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுக்கு முன்னேறியது நெதர்லாந்து!

அமெரிக்க அணிக்கெதிரான கால்பந்து உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 04, 2022 • 10:17 AM
FIFA World Cup The Netherlands qualify for quarters with empathic 3-1 win over USA
FIFA World Cup The Netherlands qualify for quarters with empathic 3-1 win over USA (Image Source: Google)

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. நேற்று நள்ளிரவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டிபே முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து 46ஆவது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த டேலி பிளைன்ட் 2ஆவது கோல் அடித்தார். 

இதையடுத்து முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில் 76ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் ஹாஜி ரைட் ஒரு கோல் அடித்தார். 

ஆனால் தொடர்ந்து அபாரமாக விளையாடிய நெதர்லாந்து அணிக்கு ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் டென்சில் டம்ப்ரைஸ் தமது அணிக்காக 3ஆவது கோலை அடித்தார். ஆனால் தொடர்ந்து போராடிய அமெஇரிக்க அணியால் மேற்கொண்டு எந்தவொரு கோலையும் அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement