
FIFA World Cup: USA Advances To Knockout Stage With 1-0 Win Over Iran (Image Source: Google)
கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 22ஆவது சீசன் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின.
இதன் ஒரு போட்டியில் ஈரான்-அமெரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன.
இப்போட்டியின் முதல் பாதியின் 38ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆனாலி ஈரான் அணியால் ஒருகோல் கூட அடிக்க முடியவில்லை.