ஃபிஃபா உலகக்கோப்பை: குரூப் சுற்றோரு வெளியேறியது ஜெர்மனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றிபெற்றாலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக குரூப் சுற்றோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே குரூப்பில் உள்ள அணிகளில் யாருக்கும் சாதகம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் 4 அணிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குரூப் ஈ பிரிவில் உள்ள ஜெர்மனி அணியை எதிர்த்து கோஸ்ட்டா ரிக்கா அணி மோதியது. ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்துவதோடு, ஸ்பெயின் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஜப்பான் தோல்வியடைய வேண்டும் என்ற நிலை நிலவியது.
இதில் தனது வேலையை சரியாக செய்ய முதல் பாதி தொடங்கியதில் இருந்து ஜெர்மனி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். இதன் பலனாக 10ஆவது நிமிடத்திலேயே செர்ஜி கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் ஜெர்மனி அணி கோஸ்ட்டா ரிக்கா அணியை எளிதாக சமாளித்தது.
தொடர்ந்து 40 நிமிடங்களும் ஜெர்மனி அணி அட்டாக் செய்ய, திடீரென 40 நிமிடங்களுக்கு பின் கோஸ்ட்டா ரிக்கா அட்டாக் செய்ய தொடங்கியது. ஆனால் கோஸ்ட்டா ரிக்கா அணி வீரர்கள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவு பரபரப்புடன் முடிவுக்கு வந்தது.
இதன்பின்னர் இரண்டாம் பாதியில் ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனி அணி அசால்ட்டாக விளையாடி வந்தது. இதனை பயன்படுத்தி கோஸ்ட்டா ரிக்கா அணியின் தஜீடா முதல் கோலை அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து 70ஆவது நிமிடத்தில் மீண்டும் கோஸ்ட்டா ரிக்கா அணியின் பாப்லோ வர்காஸ் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இது ஜெர்மன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அடுத்த 3ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி அணியின் ஹாவர்ட்ஸ் இரண்டாவது கோலை அடித்து சமன் செய்தார். இதனால் ஆட்டம் இன்னும் பரபரப்பானது. இதன்பின்னர் இரு அணிகளும் தொடர்ந்து அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். தொடர்ந்து ஜெர்மனி வீரர் ஹாவர்ட்ஸ் மீண்டும் 85வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 89வது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு கோல் அடிக்க, 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால் அதில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இருப்பினும் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தியதால், ஜப்பான் அணி 6 புள்ளிகளுடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் 4 புள்ளிகளுடன் இருந்ததால், கோல் எண்ணிக்கை அடிப்படையில் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இதனால் ஜெர்மனி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக குரூப் சுற்றோடு உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி, அடுத்தடுத்த உலகக்கோப்பைத் தொடரில் குரூப் சுற்றோடு வெளியேறுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now