
ஃபிஃபா உலகக்கோப்பை உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியுள்ளது. அந்த அணியுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ள அணி எது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இந்த அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணி விளையாடியது. இந்த போட்டியில் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் பிரான்ஸ் களமிறங்கியது. அதேபோல் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற வரலாறோடு மொராக்கோ களமிறங்கியது.
அதுமட்டுமல்லாமல் இந்த உலகக்கோப்பையில் எதிரணியை ஒரு கூட கோல் அடிக்கவிடாமல் மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. இந்த சாதனையை அடித்து துவம்சம் செய்யும் வகையில் பிரான்ஸ் அணி, ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து அசத்தியது. பிரான்ஸ் அணியின் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.