-mdl.jpg)
French Open badminton: Satwik-Chirag beat Takuro-Kobayashi to reach semis (Image Source: Google)
பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இணை உலகின் நம்பர் 1 ஜோடியான டகுரோ ஹோக்கி- யுகோ கோபயாஷியை (ஜப்பான்) எதிர் கொண்டனர்.
நொடிக்கு நொடி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி முதல் செட்டை 23-21 என்ற கணக்கில் கைப்பற்றி யுகோ இணைக்கு அதிர்ச்சியளித்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட சாத்விக் - சிராக் இணை அந்த செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி ஜப்பான் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.