
French Open badminton: Satwik-Chirag reach men's doubles final with win over Choi-Kim (Image Source: Google)
பிரஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் சோய் சோல் கியூ மற்றும் கிம் வோன் ஹோ ஜோடியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக்- சிராக் ஜோடி முதல் செட்டை 21-18, கணக்கில் எளிதில் கைப்பற்றி கொரியா வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.