
Giroud Nets Match Winner As France Edge England 2-1 To Reach Semis (Image Source: Google)
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி,முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது.
அதற்கேற்ப அந்த அணியின் வீரர் ஆரேலியன் ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெறவைத்தார். தொடர்ந்து பிரான்ஸ்க்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்தின் ஹாரி கேன், லுக் ஷா போன்றோர்கள் முயன்றனர். ஆனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணியால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியவில்லை.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஹாரி கேனின் முயற்சி ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் கைகொடுக்க இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.