
உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இரண்டாவது நாளில் நேற்ற்ய் நான்கு போட்டிகள் நடைபெற்றது.ரூர்கேலாவில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடவில்லை. இருப்பினும் சுமார் 20,000 மேற்பட்ட மக்கள் இந்த போட்டிகளை கண்டு களித்தனர். இதன் மூலம் ஹாக்கிக்கு இந்த பகுதியில் எந்த அளவுக்கு மவுசு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
குரூப் சி யில் நியூசிலாந்து அணியும் சிலி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி மூன்று கோல்களை அடித்தனர். ஆனால் சிலி அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அணியும் மலேசியா அணிகளும் பல பயிற்சி நடத்தின. போட்டி தொடங்கியதில் இருந்தே நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் மலேசியா வீரர்கள் திணறினர். இறுதியில் நெதர்லாந்து அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.