
ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கப்டுகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை மெஸ்ஸி வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது அறிவிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான விருதை வெல்லும் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். அதில் கரீம் பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா ஆகிய வீரர்கள் விருதை வெல்லும் பேவரைட் வரிசையில் இருந்தனர்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா வென்றுள்ளார். கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா தொடர்களை வென்றது. அந்த அணிக்காக விளையாடிய அவர் 46 போட்டிகளில் 44 கோல்களை பதிவு செய்திருந்தார்.