ஹாக்கி தொடர்: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
வரும் ஜனவரி மாதம் ஒடிஸாவில் எஃப்ஐஎச் ஹாக்கி ஆடவா் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகின் நம்பா் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்றது.
முதலிரண்டு ஆட்டங்களை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்றிருந்தன. இதற்கிடையே நான்காவது ஆட்டம் அடிலெய்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25ஆவது நிமிஷத்தில் தில்ப்ரீத் சிங் முதல் கோலடித்தாா். டிஃபெண்டர் ஹா்மன்ப்ரீத் தலைமையில் வலுவான தற்காப்பு அரணை ஆஸ்திரேலிய வீரா்களால் ஊடுருவ முடியாமல் திணறினா்.
ஆனால் இரண்டாம் பாதியில் நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய அணி தனது தற்காப்பில் கோட்டை விட்டதால், ஜெரேமி ஹேவா்ட் 29ஆவது நிமிடத்திலும், ஜேக் வெல்டன் 30ஆவது நிமிடத்திலும், டாம் விக்ஹாம் 34 நிமிடத்திலும், ஹேவா்ட் 41 நிமிடத்திலும், மேட் டேவ்ஸன் 54ஆவது நிமிஷங்களில் என அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் 1-5 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5ஆவது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now