Advertisement
Advertisement
Advertisement

எப்ஐஎச் புரோ லீக்: பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெனை வீழ்த்தியது இந்தியா!

எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி தொடரில் பெனால்டி ஷூட்-அவுட்டில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3-1 கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 07, 2022 • 11:48 AM
Hockey Pro League: Goalkeeper Pathak's heroics helps India beat Spain 3-1 in shoot-out
Hockey Pro League: Goalkeeper Pathak's heroics helps India beat Spain 3-1 in shoot-out (Image Source: Google)

ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ள 4ஆவது புரோ லீக் ஹாக்கி தொடர் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா- ஸ்பெயின் அணிகள் மல்லுகட்டின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணியும் கோலடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் பயணாக ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் கோலடித்து அசத்தினார். 

இதையடுத்து ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் கோலடிக்க, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 42 மற்றும் 54ஆவது நிமிடங்களில் ஸ்பெயின் அணி கோல்களை அடித்தது.

இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்ததால் ஆட்டம் சமனானது. இதையடுத்து கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3-1 கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இந்திய கோல் கீப்பர் கிருஷ்ணன் பஹதுர் பதாக், ஷூட்-அவுட்டில் ஸ்பெயினின் 3 முயற்சிகளை சூப்பராக முறியடித்து இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement