Advertisement

ஹாக்கி உலகக்கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது தென் கொரியா!

ஜப்பான் அணிக்கெதிரான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 18, 2023 • 12:32 PM
Hockey World Cup: Germany Hold Belgium 2-2; Korea Prevail Over Japan 2-1 In Pool B
Hockey World Cup: Germany Hold Belgium 2-2; Korea Prevail Over Japan 2-1 In Pool B (Image Source: Google)

ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில்  நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2ஆவது நிமிடத்திலேயே ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. 

இதை பயன்படுத்தி அந்த அணி வீரர் நகயோஷி கென் கோல் அடிக்க ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு தென் கொரியா 9ஆவது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. அந்த அணியின் லீ ஜங்ஜுன் பீல்டு கோல் அடித்து அசத்த ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

அதன்பின் ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் லீ ஜங்ஜுன் மீண்டும் பீல்டு கோல் அடித்தார். இதனால் தென் கொரியா 2-1 என முன்னிலை பெற்றது. ஜப்பான் அணி போராடிய போதும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.

முடிவில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் தென் கொரியா, பெல்ஜியத்திடம் வீழ்ந்திருந்தது. அதேவேளையில் ஜப்பான் 2ஆவது தோல்வியை பதிவு செய்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement