
Hockey World Cup: Goal-less draw but England ahead of India in race to quarters (Image Source: Google)
ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் நேற்று ஒடிசாவில் தொடங்கியது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. ‘பிரிவு ஏ’வில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளும், ‘பிரிவு பி’இல் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளனர்.
அதேபோல் ‘பிரிவு சி’வில் சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து அணிகளும்,‘பிரிவு டி’யில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெய்னை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதல் இறுதி வரை கடுமையாக போராடியும் கூட இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.