
Hockey World Cup: India Beat Wales 4-2 To Finish Second In Group D (Image Source: Google)
ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் பிரிவு டி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டி டிராவானது.
இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2 கோல்கள் அடிக்க, மூன்றாவது கால் பகுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணி 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
அதன்பின் நடைபெற்ற கடைசி கால் பகுதி ஆட்டத்தில் வெற்றியை கருத்தில்கொண்டு அபாரமாக விளையாடிய இந்திய அணி மேலும் 2 கோல்கள் அடிக்க, ஆட்டநேர முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது இந்திய அணி.