ஹாக்கி உலகக்கோப்பை 2023: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
ஹாக்கி உலக கோப்பை முதல் போட்டியில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று, உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் நேற்று ஒடிசாவில் தொடங்கியது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. ‘பிரிவு ஏ’வில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளும், ‘பிரிவு பி’இல் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளனர்.
அதேபோல் ‘பிரிவு சி’வில் சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து அணிகளும்,‘பிரிவு டி’யில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளனர்.
இதில் பிரிவு டி-யில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஸ்பெயின் அணிகள் இன்று நடந்த முதல் போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் 13ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுகொடுத்தார்.
அதன்பின் அடுத்த 13ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்திக் 2ஆவது கோல் அடிக்க அணியின் வெற்று வாய்ப்பு பிரகாசமாகியது. இதன்மூலம், இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்க, அதன்பின்னர் ஸ்பெய்ன் அணி கோல் அடிக்க எவ்வளவோ முயன்றும் கடைசி வரை அடிக்க முடியவில்லை. இதையடுத்து 2-0 என வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது.
Win Big, Make Your Cricket Tales Now