Advertisement
Advertisement
Advertisement

ஹாக்கி உலகக்கோப்பை: காலிறுதிக்கு கொரியா, ஜெர்மனி அணிகள் முன்னேற்றம்!

ஹாக்கி உலக கோப்பையில் நேற்று நடந்த 2 கிராஸ் ஓவர் போட்டிகளில் கொரியா மற்றும் ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றன. 

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 24, 2023 • 12:15 PM
Hockey World Cup: Korea Fight Back From 2-goal Deficit To Beat Argentina In Shoot-out, Reach Quarter
Hockey World Cup: Korea Fight Back From 2-goal Deficit To Beat Argentina In Shoot-out, Reach Quarter (Image Source: Google)

 ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையில் கலந்துகொண்ட அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின.

அந்தவகையில், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின. எஞ்சிய 4 இடங்களுக்கு 8 அணிகளுக்கு இடையே போட்டி. 4 பிரிவுகளிலும் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கிராஸ் ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டன.

நேற்று முந்தினம் நடந்த 2 கிராஸ் ஓவர் போட்டிகளில் மலேசியாவை வீழ்த்தி ஸ்பெய்ன் அணியும், இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்தும் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று 2 கிராஸ் ஓவர் போட்டிகள் நடந்தன. ஜெர்மனி - ஃபிரான்ஸ் இடையேயான போட்டியில் அபாரமாக ஆடிய ஜெர்மனி அணி 5 கோல்களை அடிக்க, ஃபிரான்ஸ் ஒரு கோல் மட்டுமே அடித்தது. எனவே 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கிராஸ் ஓவர் போட்டியில் அர்ஜெண்டினாவும் கொரியாவும் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே தலா 5 கோல்கள் அடிக்க ஆட்டம் டிராவானது. ஷூட் அவுட்டில் கொரியா 3 கோல்களும், அர்ஜெண்டினா 2 கோல்களும் அடிக்க கொரியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement