
Hockey World Cup: Netherlands thrash Chile 14-0 to seal quarterfinals berth (Image Source: Google)
ஹாக்கி உலகக் கோப்பை திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - சிலி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது.