Advertisement
Advertisement
Advertisement

ஹாக்கி உலகக்கோப்பை: இந்தியாவின் கனவை கலைத்த நியூசிலாந்து; ரசிகர்கள் அதிர்ச்சி!

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடந்த க்ராஸ் ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு மீண்டும் தகர்ந்துள்ளது. 

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 22, 2023 • 21:39 PM
Hockey World Cup: Spain and New Zealand reign supreme in shoot-outs to seal quarterfinals spots!
Hockey World Cup: Spain and New Zealand reign supreme in shoot-outs to seal quarterfinals spots! (Image Source: Google)

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா மைதானங்களில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்றுகள் முடிந்து அடுத்ததாக கிராஸ் ஓவர் சுற்றுகள் தற்போது நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறி விட்டன. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏ,பி,சி,டி என 4 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற வைக்கப்பட்டுள்ளன. 

இந்தியா குரூப் டி-யில் உள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, அடுத்ததாக இங்கிலாந்துடன் நடந்த போட்டியை 2-2 என டிரா செய்தது. இதையடுத்து குரூப்பில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்காக நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

குரூப் டி பிரிவில் இந்தியாவும் இங்கிலாந்தும் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என சமமாக இருந்தாலும், கோல் கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதையடுத்து கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியா இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் காலிறுதி வாய்ப்பை இந்தியா இழக்கும் என்பதால், இந்திய அணி வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி விளையாடினர்.

ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். அதன்பின் 24 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஹர்மன்ப்ரீத் ட்ராக் செய்ய, சுக்ஜீத் புயல் வேகத்தில் ஷாட் அடித்து கோலாக மாற்றினார். 28ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து அணி கோல் அடித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.  

அதன்பின் 3ஆவது கால் பகுதியில் இரு அணிகளும் மேலும் தலா ஒரு கோலை அடிக்க ஆட்டம் 3-2 என்ற கணக்கில் இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. நான்காவது கால் பகுதியில் நியூசிலாந்து மேலும் ஒரு கோல் அடித்து சமநிலைப்படுத்தியதால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது.

முதல் ஷூட் அவுட்டில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் மீண்டும் ஷூட் அவுட் தொடர்ந்தது. அதில் நியூசிலாந்து அணி 2 கோல்களை அடிக்க, இந்திய அணியால் ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தடு. இதன்மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

முன்னதாக நடந்த மற்றொரு க்ராஸ் ஒவர் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4 – 3 என்ற கணக்கில் மலேசியாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது. 24 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்பெயின் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement