
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றாக பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் போலாந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கஃபுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை ஸ்வியாடெக் 6-4 என்ற கணக்கில் கைப்பெற்றி அசத்தினார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் அபரமாக செயல்பட்ட ஸ்வியாடெக் 6-2 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி கோகோ கஃபிற்கு அதிர்ச்சிக் கொடுத்தார்.
இதன்மூலம் இகா ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கோகோ கஃபை வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.