
India Open 2023: Indian Challenge Ends With Lakshya, Saina's Loss In Second Round (Image Source: Google)
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த மகளிர் ஒற்றையர் 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் யு பேவுடன் மோதினார்.
எதிராளியின் அதிரடியான ஷாட்டுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய சாய்னா நேவால் 9-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பேவிடன் தோல்வியைத் தழுவினார். மேலும் இந்த ஆட்டம் வெறும் 32 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-16, 15-21, 18-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவிடம் போராடி தோற்றார். இந்த ஆட்டம் 1 மணி 21 நிமிடங்கள் நடந்தது.