நடுவரின் தவறால் போட்டியிலிருந்து விலகிய கேரளா; அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு!
கேர்ளா பிளாஸ்டர்ஸுக்கு எதிரான நாக்வுட் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு, கேரளா அணிகள் மோதின பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த ஆட்டத்தில் 90 நிமிடம் முடிவில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஆட்டத்தில் 96 வது நிமிடத்தில் பெரும் சர்ச்சையான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
இதில் பெங்களூர் அணிக்கு பிரி கீக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அப்போது வீரர்கள் யாரும் சரியாக லைனில் நிற்க கூட இல்லை. கேரளாவின் கோல் கீப்பர் அவர் இடத்திற்கு கூட செல்லவில்லை. அவ்வளவு ஏன் நடுவர் கூட விசில் அடிக்கவில்லை. ஆனால் அதற்குள் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து விட்டார். இதற்கு நடுவரும் அனுமதி அளித்துவிட்டார் .
இதன் காரணமாக கடுப்பான கேரளா அணி வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விதிகள் மீறி கோல் அடிக்கப்பட்டதாகவும், இது தவறு என்றும் இதனை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் முறை விட்டனர். எனினும் இதனை கண்டுகொள்ளாத நடுவர் போட்டியை தொடர கூறினார்.
இதைப் பார்த்து கடுப்பான கேரள கால்பந்து அணியின் பயிற்சியாளர் தங்களது அணி வீரர்களை போட்டியிலிருந்து விலகும் மாறு கூறியது அடுத்து கேரள வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோலை திரும்பி பெற்றுக் கொள்ள நடுவரும் முன்வராத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக கேரளா அணி அறிவித்தது.
இதனை அடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சுனில் சேத்ரி தவறான முறையில் கோல் அடித்ததாக ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவரை போட்டு தாக்கி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now