Advertisement

ஐஎஸ்எல் 2022: நார்த் ஈஸ்டை பந்தாடியது ஹைதராபாத் எஃப்சி!

ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் அசத்திய ஹதராபாத் அணி 3–0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 14, 2022 • 09:29 AM
ISL 2022-23: Dominant Hyderabad FC defeat NorthEast United 3-0
ISL 2022-23: Dominant Hyderabad FC defeat NorthEast United 3-0 (Image Source: Google)

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 9ஆவது சீசன் கோலகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி , ‘நடப்பு சாம்பியன்’ ஹதராபாத் எஃப்சி அணியுடன் மோதியது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் 13ஆவது நிமிடத்திலேயே ஹைதராபாத் அணியின் பார்தோலோமிவ் ஆக்பெச்சே முதல் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோலடிக்க எண்ணிய அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவி முடிவில் ஹைதராபாத் எஃப்சி அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

அதன்பின் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஹைதரபாத் எஃப்சி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பயனாக ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அன்ஹ அணியின் நட்சத்திர வீரர் ஆக்பெச்சே வீணடித்தார். 

ஆனாலும் தொடர்ந்து அசத்திய ஹைதராபாத் அணிக்கு ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் ஹாலிசரண் நர்ஜரியும், ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் போர்ஜா கோல் அடித்து கைகொடுத்தனர் அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். 

ஆனால் மறுமுனையில் கடைசி வரை போராடிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியினரால் ஹைதராபாத்தின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் எஃப்சி அணி 3–0 என்ற கணக்கில் நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

மேலும் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியளில் 4 புள்ளிகளைப் பெற்று ஹைதாராபாத் எஃப்சி அணி முதலிடத்திலும், இந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திலும் உள்ளன.

அதேசமயம் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி பெங்களூரு எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement