Advertisement

ஐஎஸ்எல் 2022: முதல் வெற்றியைப் பெற்றது ஈஸ்ட் பெங்கால்!

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 21, 2022 • 10:38 AM
ISL 2022-23: East Bengal register emphatic 3-1 win over NorthEast United FC
ISL 2022-23: East Bengal register emphatic 3-1 win over NorthEast United FC (Image Source: Google)

ஒன்பதாவது  சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஈஸ்ட் பெங்கால் அணி தரப்பில் கிளீடன் சில்வா ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதை தொடர்ந்து அந்த அணியின் கரிஸ் கிரியாகோ 52ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை அடிக்க, ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் ஜோர்டான் ஈஸ்ட் பெங்கால் அணியின் மூன்றாவது கோலை அடித்தார்.

பின்னர் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் மாட் டெர்பிஷைர் கூடுதல் நேரமான 90+2ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு ஆறுதல் கோலை அடித்தார். இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன்மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி 3 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி நடப்பு சீசனில் விளையாடி அனைத்து போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திலும் உள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement