Advertisement

ஐஎஸ்எல் 2022: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கோவா அசத்தல் வெற்றி!

ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கெதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 03, 2022 • 22:29 PM
ISL 2022-23:  FC Goa celebrate Fatorda homecoming with 3-0 drubbing of Jamshedpur FC!
ISL 2022-23: FC Goa celebrate Fatorda homecoming with 3-0 drubbing of Jamshedpur FC! (Image Source: Google)

பதினோறு அணிகளுக்கு இடையிலான 9ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் -எஃப்.சி. கோவா அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய 2ஆவது நிமிடத்திலே கோவா வீரர் இக்கீர் குரரோடஸேன அந்த அணியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 12ஆவது நிமிடத்தில் கோவா அணி 2ஆவது கோலையும் அடித்து தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கணக்கில் எஃப்சி கோவா அணி முன்னிலைப் பெற்றது. அதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதியில் ஆட்டத்திலும் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் கோல் அடக்க முடியவில்லை. 

மாறாக கோவா வீரர் பிரிசன் ஃபெர்னாண்டஸ் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அந்த அணிக்கு 3ஆவது கோலை அடித்தார். இதன் மூலம் ஆட்ட்நேர முடிவில் எஃப்சி கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் எஃப்சி கோவா அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதேசமயம் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement