
ISL 2022-23: Hugo Boumous' Late Penalty Helps ATK Mohun Bagan Beat Jamshedpur FC (Image Source: Google)
11 அணிகளுக்கு இடையிலான 9ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஏடிகே மோகன் பகான்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
அதன்படி விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தினர்.
இதனால் இந்த போட்டியில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் (90+1 வது நிமிடம்) ஏடிகே மோகன் பகான் அணி சார்பில் ஹியூகோ பூமஸ் ஒரு கோல் அடித்தார்.