
ISL 2022-23: Hyderabad FC record another clean sheet, register 1-0 win over Odisha FC (Image Source: Google)
பதினோறு அணிகளுக்கு இடையிலான 9ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் எஃப்சி-ஒடிசா எஃப்சி அணிகள் மோதின
இந்த போட்டியில் ஹைதராபாத் அணி சார்பில் முகமது யசிர் ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஒடிசா அணி இறுதி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தொடர்ந்து கவுகாத்தியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கேரளா அணி சார்பில் திமித்ரியோஸ் ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.