
ISL 2022-23: Hyderabad FC regain top spot with 1-0 win over FC Goa (Image Source: Google)
ஹைதராபாதில் சனிக்கிழமை இரவு ஹைரதாபாத் எஃப்சி- எஃப்சி கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தோற்காத அணிகள் என்ற பெருமையுடன் களத்தில் இறங்கின. சொந்த மைதானத்தில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது.
அதன்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் எஃப்சி அணிக்கு ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் ஜேவியா் சிவெரியோ கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தன் வசம் வைத்திருந்த கோவா அணியால் கோல் போட முடியவில்லை.
இரண்டாம் பாதியில் 83ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்காமல் கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தாா் அதன் வீரா் அல்வரோ வாஸ்கீஸ்.