ஐஎஸ்எல் 2022: ஒடிசாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை!
ஒடிசா எஃப்சிக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஓன்பதாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடார் கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஒடிசா எஃப்சி -மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதின. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆராம்பம் முதலே இரு அணிகளும் கோலடிக்க முயற்சிகளை எடுத்தனர்.
ஆனால் முதல் பாதி ஆட்டநேர முடிவின் போது இரு அணிகளாலும் எந்தவொரு கோலும் அடிக்க முடியவில்லை. அதிலும் அவர்கள் கோலடிக்க எடித்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிவடைந்தது.
அதன்பின் சூதாரித்து விளையாடிய மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு, ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் சுபம் சராங்கி கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். அதன்பின் ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் பிபின் சிங் கோலடிக்க மும்பை சிட்டி எஃப்சியின் வெற்றியும் உறுதியானது.
இதற்கிடையில் ஒடிசா எஃப்சி கோலடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் மும்பை அணியால் வலிமையான டிஃபென்ஸின் காரணமாக தவிடுபொடியானது. இதனால் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 2 கோல்கள் அடித்திருந்தது. ஒடிசா அணி எந்த கோலும் போடவில்லை.
இதன் மூலம் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி இதையடுத்து மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி, நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now