Advertisement

ஐஎஸ்எல் 2022: ஜாம்ஷெத்பூரை வீழ்த்தி ஒடிசா எஃப்சி த்ரில் வெற்றி!

ஜாம்ஷெத்பூர் எஃப்சிக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 12, 2022 • 12:26 PM
ISL 2022-23: Odisha FC Score Two Late Goals To Edge Jamshedpur FC 3-2
ISL 2022-23: Odisha FC Score Two Late Goals To Edge Jamshedpur FC 3-2 (Image Source: Google)

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 9ஆவது சீசன் நாடுமுழுவதும் உள்ள பெரும் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் 11 அணிகள் பங்கேற்கிறது.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெத்பூர் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜாம்ஷெத்பூர் அணியைச் சேர்ந்த டேனியல் கோலடித்து அசத்தினார். 

அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் போரிஸ் தங்க்ஜம் கோலடித்து ஜாம்ஷெத்பூர் அணிக்கு வலிமைச்சேர்த்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒடிசா எஃப்சி தரப்பில் டியாகோ மொரிசியோ ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.

இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெத்பூர் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதில் ஆட்டத்தில் சூதாரித்துக்கொண்ட ஒடிசா அணி அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

ஆனால் அந்த அணியின் முயற்சிகளை ஜாம்ஷெத்பூர டிஃபென்ஸ் தடுத்த நிறுத்தி ஆட்டத்தின் பரபரப்பை கூட்டியது. இறுதியில் ஆட்டத்தின் 87ஆவது நிமிடம் ஒடிசா அணியின் ஐசக் வன்மல்சாவ்மா கோலடித்து போட்டியை சமன்செய்ய ஆட்டத்தில் அனல் பறந்தது. 

பின் ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் டியாகோ மொரிசியோ மீண்டுமொரு கோலடித்து ஒடிசா எஃப்சி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஒடிசா எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெத்பூர் எஃப்சி அணியை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் ஒடிசா எஃப்சி அணி 3 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தத்து. இந்த பட்டியளில் கேரளா அணி முதலிடத்திலும், சென்னையின் எஃப்சி 3ஆவது இடத்திலும், பெங்களூரு அணி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement