ஐஎஸ்எல் 2022: கேராளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மோகன் பாகன்!
கேரளா பிளாஸ்டர்ஸுக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 5-2 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
ஒன்பதாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இத்தொடரில் நேற்று நடைபற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணி சார்பில் டிமித்ரி ஆட்டத்தின் 26, 62 மற்றும் 90 வது நிமிடத்தில் என 3 கோல்களை அடித்து அசத்தினார்.
மேலும் ஜோனி கவுகோ மற்றும் லென்னி இருவரும் தங்கள் பங்கிறகு தலா ஒரு கோல் அடித்தனர். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் இவான் ஆட்டத்தின் 6 வது நிமிடத்திலும் ராகுல் 81-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் ஏடிகே மோகன் பகான் அணி 5 கோல்களும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 கோல்களும் அடித்திருந்தன. இதையடுத்து ஏடிகே மோகன் பகான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஏடிகே மோகன் பாகன் அணி நடப்பு சீசன் ஐஎஸ்எல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து, 3 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 5ஆம் இடத்திலும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அதே மூன்று புள்ளிகளுடன் 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now