-mdl.jpg)
ISL 2022-23: Sekar sinks Bengaluru FC as Odisha FC pick up third win of the season (Image Source: Google)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 9ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதனால் ஆட்டத்தில் 33ஆவது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் நந்த குமார் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். ஆனால் பெங்களூரு அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.