
இந்தியாவின் உள்ளூர் கால்பந்து தொடரான ஐஎஸ்எல் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆா்டி டாடா விளையாட்டு வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 31ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் இகா் குவாரோட்ஸேனா தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்து ஜாம்ஷெட்பூா் கோல் கணக்கை தொடக்கி வைத்தாா். அதற்கான பிராயச்சித்தமாக அவரே, 38-ஆவது நிமிஷத்தில் கோவாவுக்காக கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.
இவ்வாறாக முதல் பாதி நிறைவிலேயே ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. அதன்பின்னா் தொடா்ந்த 2ஆவது பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரின் இஷான் பண்டிதா 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா். அதன்பின் ஆட்டம் நிறைவடைய இருந்த நிலையில்,89ஆவது நிமிடத்தில் இகா் குவாரோட்ஸேனாவே கோவாவுக்காக மீண்டும் கோலடிக்க ஆட்டம் சமன் ஆனது.