ஐஎஸ்எல் 2022-23: கோவாவை வீழ்த்தி ஏடிகே மோகன் பாகன் அபார வெற்றி!
எஃப்சி கோவா அணிக்கெதிரான ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.


இந்தியாவின் உள்ளூர் கால்பந்து தொடரான ஐஎஸ்எல் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - ஏடிகே மோகன் பாகன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஏடிகே அணிக்கு ஆட்டத்தின் 9ஆவடு நிமிடத்திலேயே டிமிட்ரி பெட்ரடோஸ் மூலம் முதல் கோல் கிடைத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவா அணியின் அன்வர் அலி ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டுவந்தார்.
மேற்கொண்டு இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முற்சிகள் வீணாகின. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் கணக்கில் சமனில் இருந்தன.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணிக்கு ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் ஹுகோ கோலடித்து அசத்தியதுடன், முன்னிலையும் படுத்தினார்.
அதன்பின் டிஃபென்ஸை கையிலெடுத்த ஏடிகே மோகன் பாகன் அணி, எஃப்சி கோவா அணியின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து வெற்றியை தன்வசமாக்கினர்.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பாகன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏடிகே மோகன் பாகன் அணி 23 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now