Advertisement

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: வெண்கல பதக்கத்தை வென்று மனிகா பத்ரா வரலாற்று சாதனை!

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 19, 2022 • 21:00 PM
ITTF-ATTU Asian Cup: Manika Batra becomes first Indian woman to win medal at Continental meet
ITTF-ATTU Asian Cup: Manika Batra becomes first Indian woman to win medal at Continental meet (Image Source: Google)

ஒரு காலத்தில் விளையாட்டை பொறுத்தமட்டில் இந்தியா ஹாக்கி மற்றும் கிரிக்கெட்டில் மட்டுமே வெற்றிகளையும் கோப்பைகளையும் பெற்று பிரபலமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், பாக்ஸிங், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டு போட்டிகளிலும் சாதனைகளை படைத்துவருகிறது.

அந்தவகையில், ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்துவருகிறது. 

இதில் அரையிறுதியில் தோற்ற இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஹினா ஹயாட்டா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மனிகா பத்ரா, 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற கணக்கில் 4 செட்களை வென்று 4-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் இந்தியாவிற்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்தார் மனிகா பத்ரா.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement