
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது போட்டியில் வலிமையான இங்கிலாந்து அணியை எதிர்த்து செனகல் அணி மோதியது. வலிமையான இங்கிலாந்து அணியை செனகல் அணி சமாளிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செனகல் அணி அட்டாக் செய்ய தொடங்கியது.
செனகல் அணியின் அட்டாக் பலருக்கும் ஆச்சரியம் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து இரு முறை செனகல் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செனகல் அணியின் முயற்சியை, இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் பிக்போர்டு தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷம் காட்ட தொடங்கினர்.
இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷத்திற்கு பலனாக 38வது நிமிடத்தில் ஜோர்டன் ஹெண்டர்சன் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் இங்கிலாந்து ரசிகர்கள் ஏங்கிய நிகழ்வு நடந்தது. உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் மூன்று அசிஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.