Advertisement

பாலன் டி ஓர் விருதை வென்றார் கரீம் பென்சிமா!

நடப்பாண்டு பாலன் டி ஓர் விருதை ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 18, 2022 • 12:35 PM
Karim Benzema wins Ballon d'Or, Putellas retains women's trophy
Karim Benzema wins Ballon d'Or, Putellas retains women's trophy (Image Source: Google)

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பாலன் டி ஓர் (Ballon d'Or) விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி இருந்தது. இதில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். வழக்கம் போலவே விருதை வெல்லும் பேவரைட் வீரர்கள் குறித்த பட்டியலும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

முன்னதாக இந்த விருவதை அதிகபட்சமாக லியோனல் மெஸ்ஸி இந்த விருதை 7 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் இந்த விருதை வென்றுள்ளார். வழக்கமாக ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டு செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்த செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2021-22 சீசனுக்கான விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 வீரர்களில் ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா ஆகிய வீரர்கள் விருதை வெல்லும் பேவரைட் வரிசையில் இடம்பிடித்தனர். அதேபோல் மெஸ்ஸி இந்த முறை பரிந்துரைக்கப்படவில்லை. 

அதன்படி நடப்பாண்டிற்கான பாலன் டி ஓர் விருதை ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா கைப்பற்றி அசத்தினார். லாலிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement