Advertisement

சோகத்திலிருந்து மீண்டு, திரும்ப வருவோம் - கிலியன் எம்பாப்பே!

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸின் வெற்றிக்காக கடுமையாக போராடிய கிலியன் எம்பாப்பே, உலக கோப்பை தோல்விக்கு பின், திரும்ப வருவோம் என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். 

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 19, 2022 • 17:12 PM
Kylian Mbappe posts defiant three-word message on social media after France's devastating World Cup
Kylian Mbappe posts defiant three-word message on social media after France's devastating World Cup (Image Source: Google)

22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்தது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு இறுதிப்போட்டிக்கான அனைத்து பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அந்த போட்டி அமைந்தது.

இறுதிப்போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா 2 கோல்கள் அடிக்க, 2ஆம் பாதியில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபே 2 கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டம் டிராவானது. கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்பேவும் தலா ஒரு கோல் அடிக்க, மீண்டும் ஆட்டம் 3-3 என டிராவானது. அதன்பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் ஃபிரான்ஸ் 2 கோல் மட்டுமே அடிக்க, 4 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது.

இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் அணியின் வேறு எந்த வீரருமே கோல் அடிக்காத நிலையில், கடுமையாக போராடி 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்ய உதவிய எம்பாப்பே, பெனால்டி ஷூட் அவுட்டிலும் கோல் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் கோல் அடிக்காததால் ஃபிரான்ஸ் தோற்றது. இந்த உலக கோப்பையை அர்ஜெண்டினா வென்றிருந்தாலும், தனி ஒருவனாக ஃபிரான்ஸின் வெற்றிக்காக போராடிய எம்பாப்பே, ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார்.

ஃபிஃபா உலக கோப்பை இறுதிப்போட்டியில் அடித்த 4 கோல்களுடன் சேர்த்து மொத்தமாக 9 கோல்கள் அடித்த எம்பாப்பே, அதிக கோல்கள் அடித்த வீரருக்கான கோல்டன் காலனியை வென்றார். கோல்டன் காலனியை வென்றாலும், ஃபிரான்ஸ் அணி தோற்றதால் எம்பாப்பே அது மகிழ்ச்சியளிக்கவில்லை. கோல்டன் காலனியை சோகத்துடன் கொண்டுசென்றார். தனது அணிக்காக எம்பாப்பே போராடிய விதமும், அவரது ஆட்டமும் அனைவரையும் கவர்ந்தது.

இறுதிப்போட்டியில் தோற்ற விரக்தியில் சோகமாக இருந்த எம்பாப்பேவை களத்திற்குள் சென்று ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் தேற்றிய சம்பவம் பெரும் வைரலானது. தோல்வி விரக்தியில் இருந்த எம்பாப்பே, அந்த சோகத்திலிருந்து மீண்டு, திரும்ப வருவோம் என்று செம உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் ட்விட் செய்துள்ளார். ஒரு விளையாட்டு வீரருக்கே உரித்தான மனவலிமையுடன், மீண்டும் கம்பேக்கிற்கு தயாராகிவிட்ட எம்பாப்பேவின் ட்வீட் இணையாத்தில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement