
Lakshya Sen Achieves Career-Best Eighth Spot In Latest BWF Rankings (Image Source: Google)
பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்த தரவரிசைப் பட்டியளில் இந்தியவைச் சேர்ந்த இளம் வீரர் லக்ஷயா சென் ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் லக்ஷயா சென் தனது கெரியரின் சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி இணை தொடர்ந்து எட்டாவது இடத்தில் நீடித்து வருகின்றனர். மற்றொரு இந்திய ஜோடியான எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 2 இடம் முன்னேறி 21ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.