Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை: மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி!

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைகளில் அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்களை அடித்த 2ஆவது வீரர் என்ற மாரடோனாவின் சாதனையை லியோனல் மெஸ்ஸி சமன் செய்தார் .

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 28, 2022 • 13:29 PM
Lionel Messi equals Diego Maradona's outstanding World Cup record for Argentina
Lionel Messi equals Diego Maradona's outstanding World Cup record for Argentina (Image Source: Google)

22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க முனைவார்கள் என்பதால் அவர்கள் மீதும் அவர்களது அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த உலக கோப்பையில் அர்ஜெண்டினா அணி அதன் முதல் போட்டியில் சிறிய அணியான ஐக்கிய அரபு அமீரகத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி மட்டுமே அர்ஜெண்டினா அணிக்கு ஒரு கோல் அடித்தார். மற்ற வீரர்கள் யாருமே கோல் அடிக்காததால் 2-1 என என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா தோற்றது.

2ஆவது போட்டியில் நேற்று மெக்ஸிகோவை எதிர்கொண்ட அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்த உலக கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி மற்றும் ஃபெர்னாண்டஸ் ஆகிய இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர்.

மெஸ்ஸி இந்த போட்டியில் அடித்த கோல், ஃபிஃபா  கால்பந்து உலக கோப்பையில் அவரது 8ஆவது கோல். ஆல்டைம் கால்பந்து ஜாம்பவானான மாரடோனாவும் ஃபிஃபா உலக கோப்பைகளில் 8 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம், ஃபிஃபா உலக கோப்பைகளில் அர்ஜெண்டினாவுக்கு அதிக  கோல்களை (8) அடித்த 2வது வீரர் என்ற மாரடோனாவின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி. 

இந்த பட்டியலில் அர்ஜெண்டினாவின் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். மெஸ்ஸி இன்னும் ஒரு கோல் அடித்தால் மாரடோனாவையும், 3 கோல் அடித்தால் கேப்ரியலையும் முந்திவிடுவார். கானாவுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்த போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, 5 உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement