ஃபிஃபா உலகக்கோப்பை: மெஸ்ஸி மேஜிக்; மூன்றாவது கோப்பையை தூக்கியது அர்ஜெண்டினா!
பிரான்ஸ் அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கியது.
கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும், ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்த இரு அணிகலூக்கும் இடையேயான இந்த ஆட்டம் , ஒரு போர்க்களத்தில் படை வீரர்கள் மோதுவது போல் . ஆட்டம் எதோ கால்பந்து தான், ஆனால் மல்யுத்தம் போட்டி போல் வீரர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும், தாக்கி கொண்டும் இருக்கிறாகள். மேலும் போட்டி கீழே விழும் வீரர்களும் ஆஸ்கார் விருது வாங்குவது போல் நடித்து மிரட்டுகிறார்கள்.
போட்டி தொடங்கியதில் இருந்தே இரு வீரர்களும் ஆக்கோரஷமாக விளையாடியதால் அனல் பறந்தது. போட்டி தொடங்கி 2 நிமிடத்திற்குள் 6 பௌல்கள் நடைபெற்றது. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதிலும் ஆட்டத்தின் 8ஆவது நிமிடம் கிடைத்த கோல் வாய்ப்பை அர்ஜென்டினா வீணடித்தது
போட்டியின் 9ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ் காயம் அடைந்தார். எனினும் அவர் போட்டியில் தொடர்ந்தார். ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் அல்வரெஸ கையில் பந்து பட்டதால், பிரான்ஸ்க்கு ப்ரி கிக் தரப்பட்டது. ஆனால் அது கோலாக மாறவில்லை.
இதனையடுத்து, பிரான்ஸ் வீரர் பாக்சில் அர்ஜென்டின வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார் . இதன் மூலம் அர்ஜென்டின ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இதனையடுத்து, அர்ஜென்டினா மேலும் அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் டி மரியா 2ஆவது கோல் அடித்தார். இந்த நிலையில், முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களை அர்ஜெண்டினா அணி வீரர்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர். ஆனால் ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கிலியன் எம்பாப்பே அதனை கோலாக மாற்றி அணிக்கு முதல் கோலை பதிவிட்டார்.
அத்துடன் நிற்காத அவர், அதற்கு அடுத்த நிமிடத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டுமொரு கோலடித்து ஆட்டத்தில் சமனிலையை உண்டாக்கினார். இதையடுத்து இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். ஆனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளாலும் மேற்கொண்டு எந்த கோலையும் பதிவுசெய்ய முடியவில்லை.
இதையடுத்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் கடுமையாக போராடியதால் அதிலும் எந்த கோலும் பதிவுசெய்யப்படவில்லை. இதனால் மேற்கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி ஆட்டத்தின் 108ஆவது நிமிடத்தில் கோலடித்து அணிக்கான வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார்.
ஆனால் அந்த சந்தோசம் அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் அர்ஜெண்டினா அணியின் தவறால் பிரான்ஸ் அணிக்கு ஆட்டத்தின் 118ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப்பயன்படுத்திய எம்பாபே அதனையும் கோலாக மாற்றி, ஹாட்ரிக் கோலைப் பதிவுசெய்ததுடன் அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார்.
இதனால் அர்ஜெண்டினா அணி கையிலிருந்த வெற்றி வாய்ப்பு பறிபோனது. இறுதியில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்திருந்ததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. இதில் எம்பாப்பே தனது அணிக்காக முதல் கோலை பதிவுசெய்ய, அடுத்தாக லியோனல் மெஸ்ஸியும் கோலடித்து ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை கூட்டினார்.
அதன்பின் பிரான்ஸ் அணி அடித்தடுத்த வாய்ப்புகளை தவறவிட, அர்ஜெண்டினா அணியோ அடுத்தடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி 3-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 4ஆவது வாய்ப்பில் பிரான்ஸ் அணி கோலடித்தாலும், அர்ஜெண்டினா அனைத்து வாய்ப்புகளையும் கோலாக மாற்றி 4-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது.
இதன்மூலம் அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக 1978 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின் தற்போது 36 ஆண்டுகளுப்பின் தனது மூன்றாவது கோப்பையை சொந்தமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now