
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
முன்னதாக பிவி சிந்து காயம் காரணமாக கடந்த 5 மாதங்கள் களம் காணாமல் இருந்த அவா், இந்தப் போட்டியில் விளையாடினாா். அதில் முதல் சுற்றிலேயே, அவருக்குக் கடுமையாக சவால் அளிக்கும் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிா்கொண்டாா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 6ஆம் இடத்திலிருந்த சிந்து 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் மரினிடம் தோல்வி கண்டாா்.
மற்றொரு இந்தியரான மாளவிகா பன்சோத் 9-21, 13-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2ஆம் இடத்திலிருந்த தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் வீழ்ந்தாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் 22-24, 21-12, 21-18 என்ற செட்கணக்கில் , சக இந்தியரான லக்ஷயா சென்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.