
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதில் முன்னாள் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் ரூனி, தன்னை ஏன் மோசமாக விமர்சிக்கிறார் என்பது தெரியவில்லை என அவர் சொல்லியுள்ளார்.
நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான போட்டிகளில் ரொனால்டோ விளையாடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. முக்கியமாக அந்த அணியின் பயிற்சியாளர் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்த சூழலில் தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணி தனக்கு செய்த துரோகம் மற்றும் ரூனி குறித்தும் ரொனால்டோ பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய. “அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம். நான் அவரை விட சிறந்தவன் என இங்கு சொல்லவில்லை” என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.