துபாய் ஓபன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் மெத்வதேவ்!
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், சக வீரரான ஆந்த்ரே ரூப்லேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.


Medvedev Completes Hard-court Hat-trick With Dubai Tennis Championships Title (Image Source: Google)
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் துபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now
Latest Sports News