
Medvedev reaches Adelaide quarters! (Image Source: Google)
அடிலெய்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சை எதிர் கொண்டார்.
இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். பின்னர் தொடங்கிய இரண்டாவது செட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 6-3 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் டேனியல் மெத்வதேவ் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மியோமிர் கெச்மனோவிச்சை வீழ்த்தி, காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்ததாக காலிறுதியில் அவா், சக ரஷ்ய வீரரான காரென் கச்சனோவை எதிர்கொள்கிறார்.