எப்ஐஎச் புரோ லீக்: நியூசிலாந்தை பந்தாடியது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான புரோ ஹாக்கி லீக்கில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.
எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி 2022-2023இன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நாளில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டிக்கான இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், மிட்பீல்டர் மன்பிரீத் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணிக்கும் ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் மந்தீப் மோர் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதற்கு பதிலடிக்கும் விதமாக நியூசிலாந்தின் சாம் லேன் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என சமனிலையில் இருந்தன. அதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 34ஆவது நிடத்தில் ஜேக் ஸ்மித்தும், 35ஆவது நிமிடத்தில் சாம் லேன் கோலடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதன்பின் சூதாரித்து விளையாடிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கும், ஆட்டத்தின் 51 மற்றும் 56ஆவது நிமிடத்தில் மந்தீச் சிங் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடிக்க இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.
இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now