
Mirabai Chanu beats Olympic champion Hou Zhihua to win silver at Weightlifting World Championships (Image Source: Google)
கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022இல், பளுதூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மீராபாய் சானு, மொத்தமாக 200 கிலோ பளு தூக்கினார். இது சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட 2 கிலோ (198 கிலோ) அதிகம்.
மீராபாய், ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மீராபாய் சானுவுக்கு இது இரண்டாவது பதக்கமாகும், முன்னதாக கடந்த் 2017ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் 194 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.