ஃபிஃபா உலகக்கோப்பை: மொராக்கோ அணியிடம் போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வி!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை காலிறுதியில் போர்ச்சுகலை 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று மொராக்கோ அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரேசில், மொராக்கோ, குரோஷியா ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதிச்சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அணியும், பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. போர்ச்சுகல் - மொராக்கோ அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி இன்று நடந்தது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிசர்லாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க லெவனில் ரொனால்டோ விளையாடாதது அதிர்ச்சியளித்த நிலையில், இன்று நடந்த காலிறுதி போட்டியிலும் மொராக்கோ அணிக்கெதிராக ரொனால்டோ முதல் பாதியில் களமிறக்கப்படவில்லை. இது ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
இதன் காரணமாக முதல் பாதியில் போர்ச்சுகல் அணி கோல் அடிக்கவில்லை. ஆனால் அதற்கு நேர் மாறாக ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் மொராக்கோ வீரர் யூசெஃப் கோலடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என மொராக்கோ முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் ரொனால்டோ களமிறங்கினார். ஆனால் போர்ச்சுகல் அணியால் 2ஆம் பாதியில் எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. கடைசிவரை கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணி தொடரை விட்டு வெளியேறியது. தோற்றபின் கண்கள் கலங்கியபடி களத்திலிருந்து ரொனால்டோ வெளியேறினார். அவர் கண் கலங்கியதை கண்ட ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now