
ஜப்பானைச் செர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் இதுவரை 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தற்போது 25 வயதாகும் ஒசாகா செப்டம்பருக்குப் பிறகு எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை. 2023 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் சமீபத்தில் அறிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் கார்டே டன்ஸ்டனை 2019 முதல் காதலித்து வரும் ஒசாகா ரசிகர்களுக்கு ஓர் நர்ச்செய்தியை அறிவித்துள்ளது. அதாவது இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை விரைவில் எதிர்பார்பதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நவோமி ஒசாகா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்காலத்தில் நான் சாதிக்க நிறைய உள்ளது என்று தெரியும். என் குழந்தை என் ஆட்டங்களைப் பார்ப்பதையும் மற்றவர்களிடம் அவர் என் அம்மா என்று சொல்லப்போவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 2023 எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும் வருடமாக இருக்கப் போகிறது. 2024 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அனைவரையும் சந்திக்கிறேன். குறிப்பு - வாழ்க்கையில் சரியான பாதை என்று எதுவுமில்லை. ஆனால் நல்ல எண்ணங்களுடன் இருந்தால் உங்களுக்கான வழியைக் கண்டடைவீர்கள்” என்று கூறியுள்ளார்.