ஹாக்கி உலகக்கோப்பை 2023: கோப்பை வென்றால் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு அறிவிப்பு!
உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.


Odisha CM Naveen Patnaik announces extra reward for players if India wins Hockey World Cup (Image Source: Google)
15ஆவது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
உலக தரவரிசையில் 6ஆவது இடம் வகிக்கும் இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 13ஆம் தேதி ஸ்பெயினைச் சந்திக்க உள்ளது.
இந்நிலையில், ஹாக்கி உலக கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now
Latest Sports News