மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
மல்யுத்த வீரர் சாகர் தங்கார் கொலை வழக்கில் ஒலிம்பியன் சுஷில் குமார் மற்றும் 17 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதலும் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர். மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார்.
இதையடுத்து, சாகர் தன்கெட் மரணத்தை கொலை வழக்காக காவல்துறையின மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர். தனிப்படை அமைத்து சுஷில் குமாரை பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். மேலும் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து துப்பு அளித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்தது.
இதையடுத்து சுஷில் குமாரை காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், டெல்லி சிறப்பு காவல்துறையின் சுஷில் குமாரை கைது செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மல்யுத்த வீரர் சாகர் தங்கார் கொலை வழக்கில் ஒலிம்பியன் சுஷில் குமார் மற்றும் 17 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரம், சட்டவிரோத வசூல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now